நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவன தலைவர் ஜான்சன்ஸ் டி. எஸ். நடராஜன் தலைமை வகித்தார். தாளாளர் ஆ. பாலதண்டபாணி கல்லூரியின் பயண வரலாறு குறித்து பேசினார். பொருளாளர் எம். கே. தனசேகரன், செயல் இயக்குநர் அரவிந்திருநாவுக்கரசு ஆகியோரும் சிறப்புரையாற்றி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். முதல்வர் ஆர். சதீஷ்குமார் கல்லூரியின் சாதனைகளை பட்டியலிட்டு, மாணவர்களின் முன்னேற்றம் குறித்து பேசினார்.