திருச்செங்கோடு: கார் மோதியதில் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

1பார்த்தது
திருச்செங்கோடு: கார் மோதியதில் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், முசிறி திருத்தியமலை குடித்தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் நாகரத்தினம் (32), இரவில் சிமென்ட் மூட்டைகளுடன் முசிறிக்குச் சென்றுகொண்டிருந்தார். வேலூர் சாலையில் வெள்ளைப்பாறை பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு சாப்பிடச் சென்றபோது, சாலையைக் கடந்து லாரியை நோக்கி வந்த அவர் மீது வேகமாக வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாகரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருச்செங்கோடு போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி