திருச்செங்கோடு: திமுக சார்பாக தங்க மோதிரம் வழங்கல்

0பார்த்தது
திருச்செங்கோடு: திமுக சார்பாக தங்க மோதிரம் வழங்கல்
திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசளிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கே. எஸ். மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மேற்கு நகர பொறுப்பாளர் நடேசன், நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, கிழக்கு நகர பொறுப்பாளர் கார்த்திகேயன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி