திருச்செங்கோடு: ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கல்

2பார்த்தது
திருச்செங்கோடு: ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கல்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பிப். 8-ஆம் தேதி நடைபெற்ற நூற்றாண்டு விழா கலை நிகழ்ச்சிக்கான நடன ஒத்திகையின்போது, 3-ஆம் வகுப்பு மாணவி ரக்ஷிதா திடீரென மயங்கி உயிரிழந்தார். மாணவியின் பெற்றோரிடம் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்க உத்தரவிட்டார். இந்த நிவாரணத் தொகையை எம்எல்ஏ ஈஸ்வரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி ஆகியோர் மாணவியின் பெற்றோரிடம் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி