நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம் சார்பாக தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் நளினிசுரேஷ்பாபு கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் வாசுதேவன், நகர் மன்ற உறுப்பினர் செல்வி ராஜவேல், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி தூய்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.