திருச்செங்கோடு: கம்பம் தெப்பக்குளத்தில் விடும் விழா

1பார்த்தது
திருச்செங்கோடு: கம்பம் தெப்பக்குளத்தில் விடும் விழா
திருச்செங்கோடு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், அழகு முத்துமாரியம்மன் உள்ளிட்ட கோயில்களில் மாரியம்மன் திருவிழா கடந்த 28ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி சனிக்கிழமை கம்பம்விடும் நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. தெற்கு ரதவீதி, ஈரோடு சாலை வழியாக கம்பங்கள் ஊா்வலமாக எடுத்துசென்று பெரிய தெப்பக்குளத்தில் விடப்பட்டன. வழிநெடுகிலும் ஏராளமான பக்தா்கள் உப்பு, மிளகளை இரைத்து வழிபட்டனா். அம்மன் மற்றும் தெய்வ வேடமணிந்த பக்தா்கள் நடனமாடினா். கம்பம்விடும் நிகழ்வையொட்டி பெரிய தெப்பக்குளம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி