திருச்செங்கோடு திருட்டு சம்பவம் - ஒருவர் கைது

1பார்த்தது
திருச்செங்கோடு திருட்டு சம்பவம் - ஒருவர் கைது
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள இரண்டு ஜவுளிக்கடைகளில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில், கர்நாடக மாநிலம், பெங்களூரு மாவட்டம், ஆனேக்கல் வட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் (29) மற்றும் அவரது உறவினர் ஈடுபட்டது தெரியவந்தது. திருச்செங்கோடு போலீசார் நடத்திய விசாரணையில், நாகராஜை கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 6.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி