இராசிபுரத்தை அடுத்த குருசாமிபாளையத்தைச் சேர்ந்த நூல் வியாபாரி பார்த்தசாரதி (48), குமாரபாளையத்தில் உள்ள தனது மனைவியை பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ராசிபுரம் புறவழிச் சாலை சந்திப்பு வழியாக சென்றபோது, அவரது இருசக்கர வாகனம் திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் கீழே விழுந்த பார்த்தசாரதி மீது அவ்வழியாக சென்ற லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருச்செங்கோடு ஊரக காவல் துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.