திருச்செங்கோடு: மின்சாரம் பாய்ந்து வடமாநில இளைஞா் பலி

73பார்த்தது
திருச்செங்கோடு: மின்சாரம் பாய்ந்து வடமாநில இளைஞா் பலி
திருச்செங்கோட்டை அடுத்த வெப்படையில் மின்சாரம் பாய்ந்து வெளிமாநில இளைஞர் உயிரிழந்தார். 

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மபூஜ் சேக் (22) பள்ளிப்பாளையம் அருகே வெப்படையில் தங்கி தோட்டத்துக்கு மருந்து அடிக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வெப்படையை அடுத்த அருவங்காடு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சம்பவதினத்தன்று மாலை மருந்து அடித்துக் கொண்டிருந்தார். 

அப்போது அங்கிருந்த லாரி மேலே ஏறியுள்ளார். அப்போது மேலே சென்ற மின் ஒயா் உரசியதில் மபூஜ் சேக்கின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். வெப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி