திருச்செங்கோடு பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

1பார்த்தது
திருச்செங்கோடு பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரத்தில் உள்ள சீதாராம்பாளையம், சூரியம்பாளையம், இறையமங்கலம், சித்தாளந்தூர், தண்ணீர் பந்தல் பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கார்டாசில் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. சீதாராம் பாளையம், சூரியம்பாளையம், தண்ணீர்பந்தல் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா 50 தடுப்பூசிகளும், இறையமங்கலத்திற்கு 40 தடுப்பூசியும், சித்தாளந்துருக்கு 35 தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளது. இம்முகாமை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி