தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி திருச்செங்கோடு, ராஜா கவுண்டம்பாளையத்தில் வாக்காளர் இடங்களுக்கு நேரடியாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தேர்தல் அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.