திருச்செங்கோட்டில் இளைஞர் உயிரிழப்பு - முதல்வர் நிதியுதவி

4பார்த்தது
திருச்செங்கோட்டில் இளைஞர் உயிரிழப்பு - முதல்வர் நிதியுதவி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவின்போது, தேர் சக்கரத்திற்கும் சுவற்றிற்கும் இடையே சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துயர சம்பவத்தை அடுத்து, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்த இளைஞருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.