திருச்செங்கோடு - Thiruchengodu

திருச்செங்கோடு பெண் வியாபாரிடம் பண மோசடி செய்தவர் கைது

திருச்செங்கோடு பெண் வியாபாரிடம் பண மோசடி செய்தவர் கைது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், தனியார் வங்கி ஊழியர் என கூறி ரூ.90 ஆயிரம் மோசடி செய்த நபர் காய்கறி வியாபாரியால் பிடிபட்டார். பாவடி தெருவைச் சேர்ந்த சசிகலாவிடம் (49) ஓமலூரில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்ப்பதாகக் கூறி அறிமுகமான நபர், கடன் பெற்று தருவதாகக் கூறி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார். மீண்டும் காய்கறி கடை வளாகத்திற்கு வந்த அவரை சசிகலா அடையாளம் கண்டு, அங்கிருந்தவர்களின் உதவியுடன் பிடித்து திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా