நமோ ட்ரோன் திதி யோஜனா (NDDY) என்பது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன் இயக்கும் பயிற்சி அளிக்கும் மத்திய அரசின் திட்டமாகும். ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இதில், 2024–2026க்குள் பெண்களுக்கு 15,000 ட்ரோன்கள் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் உரம், பூச்சிக்கொல்லி தெளிக்கும் விவசாயப் பணிகளை நவீனப்படுத்தி, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், விவசாய உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.