கடந்த 50 ஆண்டுகளாகவே இது போன்ற வன்முறைத் தாக்குதல்கள் தொடர்வதாகவும், காரணமே இன்றி வழியில் செல்வோரையும் கும்பலாக தாக்குவதாகவும் நாங்குநேரி இரட்டைக் கொலை சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அருகிலுள்ள மதுக்கடையால் இத்தகைய குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாக குற்றஞ்சாட்டும் அவர்கள், பொதுமக்கள் வெளியே சென்றுவிட்டு தங்களது வீட்டிற்கு அமைதியாக திரும்ப முடியாத பாதுகாப்பற்ற நிலை நிலவுவதாக கூறுகின்றனர்.