நாங்குநேரி பகுதியில் பட்டியலின மக்கள் வாழும் தெருவில் புகுந்த 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் படுகாயமடைந்தனர். மர்ம நபர்கள் ‘நவீன் வாழ்க’ என கோஷமிட்டபடி தாக்கியதாகவும், நவீன் என்ற நபர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்துடன் தனக்கு தொடர்பில்லை, நெல்லைக்குள் வர வேண்டாம் என போலீசார் கூறியுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.