நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய கொடூர தாக்குதலில் 2 உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து பெரும்பத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சந்தேகத்தின் பேரில் 6 பேரை பிடித்துள்ள போலீசார், ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.