சேலம் எடப்பாடி தொகுதியில் உள்ள சில டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி நாதகவினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இருப்பாளி மற்றும் சித்தூர் ஊராட்சிகளில், வழிபாட்டுத் தலங்களுக்கு மிக அருகாமையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை (எண்: 7277 & 7250) உடனடியாக அகற்ற வலியுறுத்தி, நாதகவினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (மே 15) மனு அளித்தனர். தமிழக அரசு அண்மையில் வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த கடைகளையும் அந்தப் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியுள்ளனர்.