திருநர்களின் சுய-அடையாள உரிமையை பறிக்கும் வகையிலான புதிய மசோதாவை மத்திய அரசு அவசரமாக நிறைவேற்றியதை கண்டித்து, திருநர்களுக்கான தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். கல்கி சுப்பிரமணியம் மற்றும் ரிதுபர்ணா நியோக் ஆகியோர் தங்களது கருத்துகளை கேட்காமல் இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.