வங்காளதேச பொது தேர்தலில் 212 இடங்களை கைப்பற்றிய தாரிக் ரஹ்மான் தலைமையிலான கூட்டணி இன்று (பிப்.17) புதிய அரசை அமைக்கிறது. இப்பதிவியேற்பு விழாவில் பங்கேற்க டாக்கா சென்ற இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவர் போராட்டங்களுக்கு பிறகு அமைந்த இடைக்கால அரசு முடிவுக்கு வந்து, புதிய அமைச்சரவை பதவியேற்பது தெற்காசிய அரசியலில் முக்கிய மாற்றமாக கருதப்படுகிறது.