சமீபகாலமாக ரசாயன ஃபேஷியல்களை விட, வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சருமத்தை பராமரிக்கும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. அந்த வகையில், தக்காளியில் உள்ள 'லைகோபீன்' மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் கரும்புள்ளிகளை நீக்கி, கண்ணாடி போன்ற மென்மையான பொலிவை தருவதாக கூறப்படுகிறது. தக்காளியின் சாற்றை தேன் அல்லது தயிருடன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்துக் கழுவுவதன் மூலம் சருமத்தின் பிஹெச் (pH) அளவு சீராக பராமரிக்கப்படுகிறது.