தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து ‘ஹாய்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விஷ்ணு எடவன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. வயது வித்தியாசமான காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படக்குழு, நயன்தாராவின் 41வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. நவம்பர் 18, 2025 அன்று வெளியான இந்த போஸ்டர், அவரது திரையுலகப் பயணத்தைப் போற்றும் வகையில் அமைந்துள்ளது.