நடிகர் பாலய்யாவின் 111வது திரைப்படத்தை இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். வரலாற்று கதைக்களத்துடன் உருவாகும் இந்தப் படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தப் படத்தில் பிரபல நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் இன்று (நவ. 18) சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்னர், நடிகர் பாலய்யாவும் நடிகை நயன்தாராவும் ஜெய் சிம்ஹா, ஸ்ரீராம ராஜ்ஜியம் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.