தவெக தலைவர் விஜயைக் கடுமையாக விமர்சித்துப்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தனக்கு வாக்களிக்குமாறு பெற்றோர்களை நச்சரிக்குமாறு குழந்தைகளைத் தூண்டிய
விஜய், தற்போது அதே குழந்தைகள் தினசரி பாலியல் மிருகங்களிடம் சிக்கிச் சின்னாபின்னமாவதை வேடிக்கை பார்ப்பது மலினமான குணாதிசயம் எனச் சாடியுள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.