“லட்சியம், கொள்கை, கோட்பாடு இதுவெல்லாம் என்னவென்றே தெரியாமல் ஒரு கூட்டம் சுற்றுகிறது” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தஞ்சை மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய துணை முதலமைச்சர், “அரசியல் என்றால் ஏதோ என்டர்டெய்ன்மென்ட் என்று நினைக்கிறார்கள். NDA கூட்டணியில் சேர்ந்தவர்கள் அனைவரும் பஞ்சரான டயர்கள். அது, தமிழகத்தில் ஓடவே ஓடாது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.