தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வில் (
நீட்) ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் தள்ளிவைப்பு போன்ற குழப்பமான சூழல்களால், நடப்பாண்டில் கணிசமான மருத்துவ ஆர்வலர்கள் தங்களின் மாற்று வாய்ப்பாகப் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுகள் ஏதுமின்றி, பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 440-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் ஜூன் 8 முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.