வினாத்தாள் கசிவு புகார
ால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ல் மறுதேர்வு நடக்கவுள்ள நிலையில், இத்தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வலியுறுத்தித் திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் ம
ுழுவதும் இன்று (16.5.2026) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூரில் நடைபெற்ற முதன்மை ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர் கி. வீரமணி தலைமை தாங்கினார். மாநிலங்களே
மருத்துவ மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதே அரசியலமைப்புச் சட்டப்படியானது என்றும், நீட் தேர்வு ஒடுக்கப்பட்ட மாணவர்களைப் பாதிக்கும் என்றும் அவர் பேசினார்
.