நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் செலுத்திய தேர்வுக்கட்டணத்தை திருப்பியளிக்க தேசிய தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக விண்ணப்பதாரர்கள் தங்களின் கணக்கு எண், IFSC குறியீடு உள்ளிட்ட வங்கி விவரங்களை NTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த வங்கி விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மே 27 ஆம் தேதி இரவு 11.50 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.