நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில்,
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) இன்னும் பாடம் கற்கவில்லையா என்றும் நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளனர். வினாத்தாள் கசிவு புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனுக்கள் மீதான இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி:News18