முன்னாள்
பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 62வது நினைவு தினமான இன்று (மே.27),
காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், "சுதந்திரம், ஜனநாயகக் கொள்கைகள், அரசியலமைப்பு உரிமைகள், சமூக நீதி மற்றும் அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நேருவின் தொலைநோக்கு தலைமைத்துவம், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் என்றும் வழிகாட்டியாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.