மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்வால் நேருவின் 137-வது பிறந்த நாளையொட்டி, இன்று (நவ., 14) சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு, காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மௌலானா மற்றும் திமுக எம்எல்ஏக்கள், துணை மேயர், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.