“முதலமைச்சர் விஜய்க்கு 6 மாதங்கள் நேரம் கொடுக்க வேண்டும்” என
கமல்ஹாசன் எம்பி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் தமிழர் ஒருவர் ஆட்சி அமைத்தால் அது திராவிட கட்சி தான்” என தவெக குறித்து கூறியுள்ளார். மேலும், ‘விஜயை பார்த்து பொறாமை படவில்லை, கமலை பார்த்து வேண்டுமென்றால் பொறாமை படுவேன்’ என ரஜினி கூறியது குறித்த கேள்விக்கு, “நானும், ரஜினிகாந்தும் பொறாமை படமாட்டோம், போட்டிப்போடுவோம்” என தெரிவித்துள்ளார்.
நன்றி: நியூஸ்18