நியோமேக்ஸ் மோசடி.. ரூ.239 கோடி சொத்துகளை முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

17பார்த்தது
நியோமேக்ஸ் மோசடி.. ரூ.239 கோடி சொத்துகளை முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 5 வழக்குகள் தொடர்பாக முடக்கப்பட்டுள்ள ரூ.239 கோடி மதிப்பிலான சொத்துகளை முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சந்தை மதிப்பின்படி ரூ.800 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகளை ஒப்படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்களின் பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி