நேபாளம் துயரம்: 11 நாட்களுக்கு பிறகு மூதாட்டி உயிருடன் மீட்பு

1பார்த்தது
நேபாள பேரழிவில் நுவாகோட் பகுதியில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 64 வயது மூதாட்டி ஒருவர், 11 நாட்களுக்கு பிறகு மீட்பு குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இதுவரை 1,287 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாயமான 5,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளுக்கு இடையே 11 நாட்களை கடந்து மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம், மீட்பு குழுவினருக்கு பெரும் நம்பிக்கையையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி