டி20 உலகக் கோப்பை தொடரின் 10வது போட்டியில் நமீபியா–நெதர்லாந்து அணிகள் மோதின. டெல்லியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நமீபியா 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. ஜான் ஃபிரைலிங்க் 30, ஜான் நிகோல் 42 ரன்கள் எடுத்தனர். 157 ரன் இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து, பேஸ் டி லீட் 72 ரன்கள் எடுத்ததன் மூலம் 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.