ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் டிங்கி படகோட்டப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நேத்ரா குமணன் வெண்கலப் பதக்கம் வென்றார். அவருக்கு முதலமைச்சர்
விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், அவரது சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். நேத்ராவின் திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டிய முதலமைச்சர், அவரது வெற்றி இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்றார்.