நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், நஞ்சில்லா வேளாண்மை முறைகளை ஊக்குவித்து, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம், கும்பகோணத்தில் வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள் ரூ.4.6 கோடியில் அமைக்கப்படும் என கூறிகார்.