அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவ.24) தாழ்வுமண்டலமாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற தென் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.