முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, அதிமுகவில் மீண்டும் சேர முடியாத நிலையில், பிப்., 24 அன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ‘அம்மா அதிமுக’ என்ற புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும், தனது தலைமையில் புதிய கூட்டணி அல்லது தவெகவுடன் கூட்டணி வைக்கவும் சசிகலா முடிவு செய்துள்ளதாக பேசப்படுகிறது. திருமங்கலம் தொகுதியில் சசிகலா போட்டியிட உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.