டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஏற்ப வரும் அக்.1-ம் தேதி முதல் புதிய வங்கி விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன. இப்புதிய சட்டத்திருத்தத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் மொபைல் ஆப் மற்றும் இணைய வங்கி வழியாக பதிவிறக்கம் செய்யும் இ-ஸ்டேட்மெண்ட் மற்றும் கிளவுட் பதிவேடுகளுக்கு காகித பாஸ்புக்கிற்கு இணையான முழு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் கையொப்பம் மூலம் ஆவணங்களை சரிபார்க்கும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளதால், வங்கி சேவைகள் மற்றும் கடன் ஒப்புதல்களை பொதுமக்கள் விரைவாக பெற முடியும்.