இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், ஃபிளெக்ஸ்-ஃபியூவல் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் E22 முதல் E30 வரையிலான புதிய எத்தனால் எரிபொருள் தரநிலைகளை இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) மே 15 முதல் அமல்படுத்தியுள்ளது. எத்தனால் கலப்பை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதிகளை அகில இந்திய மதுவடிவோர் சங்கம் (AIDA) மனதார வரவேற்றுள்ளது.