மதுரை தமுக்கத்தில் ரூ.214 கோடி மதிப்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரிலான புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்., 21) திறந்து வைத்தார். தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை I0 கி.மீ. நீளத்திற்கு புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மதுரையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவகங்கையில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டுள்ள மருது சகோதரர்கள் சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.