AUDI நிறுவனத்தின் 3-ஆம் தலைமுறை Q3 சொகுசு கார் அக்டோபர் 16-ல் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. அகலமான முன்பகுதி, 'ஸ்பிளிட்-ஹெட்லேம்ப்' உள்ளிட்ட நவீன அம்சங்களுடன் உருவாகியுள்ள இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.55 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சந்தையில் இது பிஎம்டபிள்யூ X1 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் GLA மாடல் கார்களுக்குக் கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.