ஓய்வுக்குப் பிறகு புதிய பயணம்.. ஐரோப்பிய டி20 லீக்கில் இணைந்தார் ரகானே

11பார்த்தது
ஓய்வுக்குப் பிறகு புதிய பயணம்.. ஐரோப்பிய டி20 லீக்கில் இணைந்தார் ரகானே
இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜிங்க்யா ரகானே, புதிதாக தொடங்கவுள்ள ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் தொடரில் ஆம்ஸ்டர்டாம் ஃப்ளேம்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ரகானே, தற்போது டி20 கிரிக்கெட்டில் தனது பயணத்தை தொடர உள்ளார். ஆகஸ்ட் 26-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் அயர்லாந்து மற்றும் நெதர்லாந்தில் நடைபெற உள்ளது. ரகானே இணைந்திருப்பது ஆம்ஸ்டர்டாம் ஃப்ளேம்ஸ் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி