தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 22ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே இன்று (நவ., 20) மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்று இதுவரை எந்த மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.