முதலமைச்சரும், தவெக தலைவருமான
விஜய் தனது கட்சி கொள்கைகளைப் பரப்ப 'வெற்றி டிவி' என்ற புதிய செய்தி மற்றும் பொழுதுபோக்கு தொலைக்காட்சியைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளரான ஆதவ் அர்ஜுனா இந்த சேனலின் நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை கவனிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கட்சி சார்ந்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் தொடங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.