வங்கதேசத்தில் இன்று (பிப்., 17) புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்கிறார். 2024-ல் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி நடந்து வந்தது. இந்த நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளார்.