நகைக்கடன் புதுப்பிப்பதில் புதிய பிரச்னை.. பொதுமக்கள் வேதனை

70பார்த்தது
நகைக்கடன் புதுப்பிப்பதில் புதிய பிரச்னை.. பொதுமக்கள் வேதனை
தமிழ்நாட்டில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிப்பதில் சிக்கல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நகைக் கடன் ஓராண்டு முடிந்ததும், வட்டியை மட்டும் செலுத்தி கடனை நீட்டிக்க முயன்றால் வங்கி அதிகாரிகள் மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முழுத் தொகையையும் செலுத்தி நகையை மீட்குமாறு வற்புறுத்தப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். கிராமப்புற மக்களுக்கு இது பெரும் நிதிச் சுமையாக மாறியுள்ளது.

தொடர்புடைய செய்தி