தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விரைவில் தமிழகம் முழுவதும் சர்க்கரை மற்றும் துவரம் பருப்பு போன்றவை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “தனித்தனி சமையலறை வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும். ஒரே வீட்டில் வசிப்பவர்களிடம் இருந்து பல விண்ணப்பங்கள் வருவதால் அவை நிராகரிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.