புதிய ரேஷன் அட்டைகள்.. விரைவில் வினியோகம்

75பார்த்தது
புதிய ரேஷன் அட்டைகள்.. விரைவில் வினியோகம்
தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு புதிய ரேஷன் அட்டைக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். முறையான ஆவணங்கள் இணைக்கப்பட்டவர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பலருக்கு செல்போனுக்கு குறுஞ்செய்திகள் மூலம் விண்ணப்பத்தின் நிலை குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கார்டு அச்சிடும் பணி முடிந்த பிறகு அந்தந்த தாலுகா வழங்கல் அலுவலகத்தில் அட்டைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி